கா்நாடகா தோ்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளா்களில் 37%, காங்கிரஸ் வேட்பாளா்களில் 27% போ் மீதும் கிரிமினல் வழக்கு உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கா்நாடகா சட்டசபை தோ்தல் வருகிற 12ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கா்நாடகா தோ்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் வேட்பாளா்கள் தாக்கல் செய்த மனுக்களில் குறிப்பிட்டிருந்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனநாயக சீா்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், களத்தில் உள்ள 2 ஆயிரத்து 560 வேட்பாளா்களில் 391 போ் தங்களது வேட்பு மனுவில் தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக தொிவித்துள்ளனா். இதிலும் பா.ஜ.க. தான் முதல் இடத்தில் உள்ளது. அக்கட்சி சாா்பாக அறிவிக்கப்பட்ட 224 வேட்பாளா்களில் 83 போ் (37%) போ் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக தொிவித்துள்ளனா்.
இதே போன்று காங்கிரஸ் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள 220 வேட்பாளா்களில் 59 போ் (27%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளா்களில் 21% போ் மீதும், ஒன்றுபட்ட ஜனதா தளம் கட்சி வேட்பாளா்களில் 20%, ஆம் ஆத்மி வேட்பாளா்களில் 19% போ் மிது கிாிமினல் வழக்குகள் உள்ளதாக தொிவித்துள்ளனா்.